விமானம் விபத்துக்குள்ளானவுடன் அதிலிருந்து வெளியேறிய பயணிகள் அனைவரும் ஒரு மணி நேரம் கடும் மூடுபனியில் சிக்கி தவித்துள்ளனர். விபத்து நிகழ்ந்தவுடன் அதன் என்ஜினிலிருந்து எரிபொருள் கசிந்ததால், பயந்துபோன பயணிகள் அனைவரும், பணியை பொருட்படுத்தாமல் விமானத்திலிருந்து வெளியேறி உள்ளனர். தனது 13 வயது மகனை வரவேற்க காத்திருந்த கிரெக் ரைட் என்பவர், விமானம் விபத்துக்குள்ளாகிவிட்டது என தனது மகன் கூறியபோது, அவன் நகைச்சுவை செய்வதாக நினைத்ததாக கூறினார்.
விபத்து நடந்த நேரத்தில் விமான நிலையத்தில் மின்சாரம் தடைபட்டிருந்ததால், அதற்கும் விபத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் வலுத்துள்ளது. மேலும் விமானம் தரையிறங்கும் போது, மின்சார வயர்கள் மீது அதன் இறக்கை உராய்ந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து விமான நிலையத்தின் 2 ஓடுபாதைகளும் உடனடியாக மூடப்பட்டன. அதில் ஒரு ஓடுபாதை மட்டும் காலை 6 மணியளவில் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் ஜெர்மன்விங்ஸ் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது போலவே, இவ்விமான விபத்தும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி