அதை சிலர் தவறாக புரிந்துகொண்டு மம்மூட்டி டைரக்டர் வேலையில் தலையிடுபவர் என்கின்றனர். நான் ஒரு இயக்குனராக, அவர் சந்தேகம் கேட்பதை வரவேற்கிறேன். அதுதான் நடிகரின் ஆர்வத்தை வெளிப்படுத்தும் செயல். ஒவ்வொரு நடிகருக்கும் ஒருபாணி இருக்கிறது. மோகன்லாலை பொறுத்தவரை எல்லாவற்றையும் ஞாபகம் வைத்திருப்பார். அதனால் அவர் டவுட் கேட்க மாட்டார். அர்த்தமுள்ள கேள்விகளை மட்டுமே மம்மூட்டி கேட்பார்.
பிறகு அவரிடமிருந்து நாம் எதிர்பார்த்ததைவிட அதிக நடிப்பை பெறலாம். என்னைப்பற்றி அவர் வெளிப்படையாக விமர்சனம் செய்வார். சினிமாவில் மட்டும்தான் நான் நன்றாக விளங்குகிறேன் மற்றபடி சொந்த வாழ்க்கையிலும் மற்ற விஷயங்களிலும் முட்டாள்தனமாகவே செயல்படுவதாக கூறுவார். அவரது விமர்சனத்தை நான் ரொம்பவே ரசிப்பேன்.இவ்வாறு சித்திக் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி