அந்த வகையில், இந்தியாவில் வரும் 4-ந்தேதி முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது. மதியம் 3.45 மணிக்கு துவங்கி இரவு 7.15 மணி வரை நீடிக்கும் இந்த சந்திர கிரகணத்தில் நிலவு முழுமையாக மறையும். இந்த அபூர்வ வானியல் நிகழ்வை இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அந்தமான் தீவுகளிலிருந்து முழுமையாக பார்க்கலாம். எனினும், முழுமையான சந்திர கிரகணமானது மிக சில நிமிடங்களே நீடிக்கும். நிலவு பூமியின் முதற்பகுதி வழியாக கடந்து செல்லும் போது ஏற்படும் கிரகணத்தை இந்தியாவிலிருந்து பார்க்க முடியாது. சந்திரன் உதயமாகும் போது ஏற்படும் முழுமையான சந்திர கிரணத்தை இந்தியாவின் வடகிழக்கு பகுதி மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளிலிருந்து பார்க்கலாம். மற்ற இந்திய பகுதிகளிலிருந்து பாதியளவு சந்திர கிரகணத்தை மட்டுமே பார்க்க முடியும்.
குறிப்பாக, முழு சந்திர கிரகணத்தை ஐஸ்வால், திப்ரூகார்க், இம்பால், இடாநகர், கோஹிமா, தேசு, போர்ட் பிளேர் ஆகிய இடங்களில் தெரியும். சர்வதேச அளவில், கிழக்கு ஆசிய பகுதி, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்காவின் மேற்கு பகுதி, அண்டார்டிகா, இந்திய பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதியில் காணலாம். கிரகணத்தின் நிறைவுக்கட்டத்தை அர்ஜெண்டினா, பிரேசிலின் மேற்குப் பகுதி, அமெரிக்கா மற்றும் கனடாவின் கிழக்கு பகுதிகளில் பார்க்கலாம். அதேபோல், கிரகணத்தின் ஆரம்ப கட்டத்தை பாகிஸ்தான், கசகஸ்தான், இந்தியா மற்றும் ரஷ்யாவின் சில பகுதிகளிலிருந்து காண முடியும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி