* நேற்றைய அரைஇறுதியில் ஆஸ்திரேலியா 328 ரன்கள் சேர்த்தது. உலக கோப்பை அரைஇறுதியில் 300 ரன்களை கடந்த முதல் அணி ஆஸ்திரேலியா தான். இதற்கு முன்பு இதே உலக கோப்பையில் ஆக்லாந்தில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான அரைஇறுதியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 299 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.
* இந்த உலக கோப்பை தொடரில் இந்திய வீரர் ஷிகர் தவான் 412 ரன்கள் சேர்த்துள்ளார். ஒரு உலக கோப்பையில் 400 ரன்களுக்கு மேல் எடுத்த 4-வது இந்தியர் தவான் ஆவார். ஏற்கனவே சச்சின் தெண்டுல்கர் (1996, 2003, 2011), சவுரவ் கங்குலி (2003), ராகுல் டிராவிட் (1999) ஆகியோர் இச்சிறப்பை பெற்றுள்ளனர்.
* இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். உலக கோப்பை நாக்-அவுட் சுற்றில் 4 விக்கெட் எடுத்த முதல் இந்திய பவுலர் இவர் தான். ஏற்கனவே கால்இறுதியிலும் அவர் இச்சாதனை செய்திருந்தார்.
* ஆஸ்திரேலியா இந்த ஆட்டத்தில் 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே, உலக கோப்பை அரைஇறுதியில் ஒரு அணியின் சிறந்த வெற்றியாகும். இதற்கு முன்பு 2003-ம் ஆண்டு உலக கோப்பை அரைஇறுதியில் இந்திய அணி கென்யாவை 91 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி