தனது 45 லட்சம் கிலோ மீட்டர் சாதனைக்காக கோர்டன் தேர்ந்தெடுத்தது, அலாஸ்கா. அவர் உலகில் போகாத இடமாக அலாஸ்கா மட்டுமே இருந்தது. அதனால், அவர் தனது முதல் பயணத்தை அங்கிருந்தே தொடங்கினார். இதுவரை 18 நாடுகளில் தனது காரை ஓட்டியுள்ள கோர்டன், தனக்கு மிகவும் பிடித்த நாடாக சுவீடனை சொல்கிறார். 20 லட்சம் மைல்களை கடந்த போதே கோர்டனின் பெயர் கின்னசில் பதிவாகி விட்டது. அப்போதே வால்வோ நிறுவனமும் தன் பங்குக்கு ஒரு ஸ்போர்ட்ஸ் காரை கோர்டனுக்கு பரிசளித்து பெருமைப்படுத்தியது.
இப்போது வரை கோர்டன் தனது காரில் கடந்துள்ள தூரம் உலகத்தை 120 முறை சுற்றி வருவதற்கு சமமான தூரம். இதைப் பற்றி கோர்டனிடம் கேட்டால், எவ்வளவு தூரம் கடந்து இருக்கிறேன் என்பது முக்கியமல்ல. ஒவ்வொரு பயணமும் எனக்கு கற்றுக்கொடுத்தது என்ன என்பதுதான் முக்கியம். என் வால்வோ எனக்கு வாழ்க்கையை வாழ கற்றுக்கொடுத்திருக்கிறது. இன்னும் போக வேண்டிய தூரமும் கற்க வேண்டிய பாடமும் நிறைய இருக்கிறது என்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி