குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் தரப்பில் ஆ.ராசா, கனிமொழி, கலைஞர் டி.வி.யின் முன்னாள் இயக்குனர் சரத்குமார் உள்ளிட்ட 29 பேர்களின் சாட்சியங்களும் பதிவு செய்யப்பட்டன.
இதற்கிடையே கனிமொழியின் கோரிக்கையின்படி, அவர் கலைஞர் டி.வி.யின் இயக்குனர் பதவியில் இருந்து விலகியதற்கான கடிதத்தின் நகலை நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அதிகாரி நவில் கபூர் நேற்று சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் தாக்கல் செய்தார். இதையடுத்து சாட்சி விசாரணை முடிந்துள்ள நிலையில், இந்த வழக்கில் இறுதி வாதம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 15-ந்தேதி தொடங்கும் என நீதிபதி ஓ.பி. சைனி அறிவித்து அதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஒரு அங்கமாக, கலைஞர் டி.வி.க்கு 200 கோடி ரூபாய் பணப்பரிமாற்றம் நடந்ததாக அமலாக்கப்பிரிவு தொடர்ந்த மற்றொரு வழக்கில் நீதிபதி ஓ.பி. சைனி, குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் கொடுத்த சுமார் 400 கேள்விகளுக்கு ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் எழுத்து வடிவில் அளித்த பதில் நேற்று கோர்ட்டில் நீதிபதி முன்னிலையில் பதிவு செய்யப்பட்டது. தயாளு அம்மாள் சார்பில் அவருடைய வழக்கறிஞர் சுதர்சன் தாக்கல் செய்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி