2006-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டி மற்றும் சமீபத்தில் நடந்த தேசிய விளையாட்டு போட்டியில் 75 கிலோ உடல் எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற பஞ்சாப் பளுதூக்கும் வீராங்கனை கீதாராணி, தேசிய விளையாட்டு போட்டியில் பளுதூக்குதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற அரியானா வீராங்கனை ஹர்ஜீத் கவுர் (58 கிலோ), மராட்டிய வீராங்கனை கோமல் வகாலே (75 கிலோ), சண்டிகார் வீராங்கனை மங்டே கோம் (75 கிலோ) மற்றும் பெண்களுக்கான சங்கிலி குண்டு எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற பஞ்சாப் வீராங்கனை ராச்னா ஆகியோர் பெயர் இதில் அடங்கும். ‘பி’ மாதிரி சோதனை முடிவு உறுதி செய்யப்பட்ட பின்னர் சம்பந்தப்பட்ட வீராங்கனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். குறைந்தபட்சம் 4 ஆண்டு காலம் தடை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி