2 ஆண்டுகளில் 10 தவணையாக இந்த பணம் திருப்பி தரப்படும் என்றும், அவரது நிறுவனத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பங்குகள் எம்.கே. மீடியாவுக்கு வழங்கப்படும் என்றும் அப்போது உறுதி கூறப்பட்டது. ஆனால் அவர்கள் கூறியபடி பணம் திருப்பி வழங்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து எம்.கே. மீடியா நிறுவனம் கொல்கத்தா ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஷில்பா ஷெட்டி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டது.
அதன்படி எம்.கே. மீடியா நிறுவனம் சார்பில் தேபஷிஸ் குகா என்பவர் கொல்கத்தா ஷேக்ஸ்பியர் சாரணி போலீசில் புகார் செய்தார். இதை பெற்றுக்கொண்ட போலீசார் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் ரிபு சுதன் குந்த்ரா ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி