கேள்வி: இவ்வளவு போராட்டத்துலயும் எது உங்களை சோம்பல் இல்லாமல் வைத்திருக்கிறது?
பதில்: தியேட்டரில் பார்வையாளர்கள் கொடுத்த ஆதரவு, எனக்கு நம்பிக்கையும், எப்படி நான் வேலை செய்ய வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுத்தது.
கேள்வி: சமீப வருடங்களாகவே தமிழ் நாடு, கேரளா, கர்நாடகா என பி, சி வகுப்பு மக்களிடம் அதிகம் பேசப்படுவது நீங்கள் மட்டுமே ? என்ன செய்கிறீர்கள் அதற்கு?
பதில்: எனக்கு தெரிந்து பார்வையாளர்கள் என்னிடம் சிறப்பான இணைப்பில் உள்ளனர். பலரும் என்னை சகோதரனாக, நண்பனாக உணர்கீறார்கள். மேலும் காமெடியும் மற்றொரு காரணம்.
கேள்வி: ரஜினிமுருகன் படத்திற்கு பிறகு உங்களின் அடுத்த படம் என்ன?
பதில்: இன்னமும் நான் அது குறித்து முடிவு செய்யவில்லை.
கேள்வி: உங்களின் ‘‘காக்கி சட்டை’ மற்றும் ‘ எதிர் நீச்சல்’ படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் , இயக்குநர் துரைசெந்தில்குமார் குறித்து கூறுங்கள்?
பதில்: அவர் தான் என்னை மாற்றியவர். மேலும் திரையில் வித்யாசமான முயற்சிகளும் செய்ய வைத்தவர்.
கேள்வி: தனுஷ் படங்களில் உங்களுக்கு பிடித்த படம்
பதில்: புதுபேட்டை.
கேள்வி: மகேஷ் பாபு குறித்து உங்கள் பதில்? அவரது படங்களில் எந்த படம் உங்கள் ஃபேவரிட்?
பதில்: அவர் திரையில் வந்தாலே பிடிக்கும். அவரது வசன உச்சரிப்பு மிகவும் பிடிக்கும். அவரை சந்தித்தது மகிழ்ச்சி.
கேள்வி: கல்லூரி மாணவனாக நடிப்பீர்களா?
பதில்: கண்டிப்பாக , காத்திருக்கிறேன், அது வேடிக்கையாக இருக்கும்.
கேள்வி: பாண்டிராஜ் தான உங்களுக்கு கே.பி?
பதில்: தேசிய விருது பெற்ற இயக்குநர் . அவரது படத்தில் எனக்கு முதல் வாய்ப்பு கிடைத்தது பெருமை.
கேள்வி: அனிருத்திடம் உங்களுக்கு பிடித்தது?
பதில்: தன்னம்பிக்கை, பக்குவம், மற்றும் திறமை.
கேள்வி: ராஜமௌலி படத்தில் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா?
பதில்: அவர் மிகவும் பெரிய மனிதர். கண்டிப்பாக வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன்.
கேள்வி: விஜய் சேதுபதியை உங்களுக்கு போட்டியாக நினைக்கிறீர்களா? அவரது படங்களில் உங்களுக்கு பிடித்த படம்?
பதில்: எனக்கு போட்டிகளில் நம்பிக்கை இல்லை. அவரது படங்களில் பீட்சா எனக்கு பிடிக்கும்…
கேள்வி: அஜித்தை சந்தித்த தருணம் பற்றி?
பதில்: அவருடன் 5 மணி நேரம் பேசினேன். வாழ்க்கைக்கு தேவையான தன்னம்பிக்கை கிடைத்தது போல் உணர்கிறேன்.
கேள்வி: விஜய்யை பற்றி உங்கள் கருத்து?
பதில்: அவர் Complete Entertainer … என்று கூறினார்.
மேலும் பலரின் கேள்விகளுக்கு பதிலளித்த சிவகார்த்திகேயன் அனைவரின் கேள்விகளுக்கும் பதிலளிக்க ஆசைதான் .கண்டிப்பாக அடுத்த முறை பதிலளிக்கிறேன். #ChatwithSK என ட்ரெண்ட் செய்தமைக்கு மிக்க நன்றி. என ட்வீட் செய்துவிட்டு விடைபெற்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி