ஜோத்பூர்:-இந்திய கிரிக்கெட்டின் இமயம் சச்சின் தெண்டுல்கர் 2013-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார். அவர் கடைசியாக 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்றார். அது அவரது 200-வது டெஸ்டாகவும் அமைந்தது.
பிரிவு உபசார டெஸ்டில் அவர் பயன்படுத்திய சிறப்புமிக்க அந்த சீருடை நேற்று முன்தினம் இரவு ஜோத்பூரில் ஏலம் விடப்பட்டது. அந்த உடையை ரூ.6 லட்சத்திற்கு, ஜோத்பூர் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த ஷிவ் ராஜ்சிங் வாங்கினார். இதே போல் மேலும் பல நினைவுப்பொருட்கள் ஏலம் விடப்பட்டது. இதில் கிடைத்த தொகை, தலையில் காயம் அடைந்தோருக்கு உதவும் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி