புதுடெல்லி:-அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி உலக அளவில் அதிகமான இரும்பு உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா முன்னேறியுள்ளது. இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதத்தில் மட்டும் இந்தியா 14.6 மில்லியன் டன்னுக்கு இரும்பு உற்பத்தி செய்துள்ளது.
தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக இரும்பு உற்பத்தியில் 4வது இடத்தை இந்தியா தக்க வைத்துக்கொண்டுள்ளது. இப்பட்டியலில் சீனா முதலிடத்தையும், ஜப்பான் 2வது இடத்தையும், அமெரிக்கா 3வது இடத்தையும் பிடித்துள்ளன. உலக இரும்பு சங்கத்தின் தகவல்கள் படி, உலக அளவில் 0.6 சதவீத அளவுக்கு இரும்பு உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், நமது நாட்டின் உற்பத்தி கடந்த 2 மாதங்களில் மிக அதிகமாக 7.6 சதவீத அளவுக்கு உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி