3-வது விக்கெட்டுக்கு கெய்ல் உடன் சாமுவேல்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நியூசிலாந்தின் பந்து வீச்சை துவம்சம் செய்தது. 7-வது ஓவரை வெட்டோரி வீசினார். அந்த ஓவரில் கெய்ல் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். அத்துடன் வெஸ்ட் இண்டீஸ் 7 ஓவரில் 50 ரன்னை கடந்தது. 8-வது ஓவரில் கெய்ல் மீண்டும் ஒரு சிக்சர் அடித்தார். 9-வது ஓவரை சவுத்தி வீசினார். சாமுவேல்ஸ் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 21 ரன்கள் குவித்தார். ஆனால் அடுத்த ஓவரில் சாமுவேல்ஸ் அடித்த பந்தை தேர்ட்மேன் பகுதியில் நின்ற வெட்டோரி ஒரு கையில் அபாரமாக கேட்ச் பிடித்து சாமுவேல்ஸ்-ஐ வெளியேற்றினார். அப்போதுதான் நியூசிலாந்து வீரர்கள் கொஞ்சம் நிம்மதி அடைந்தனர். இந்த இருவரும் 22 பந்தில் 53 ரன்கள் குவித்தனர். அடுத்து வந்த ராம்தீன் அதே ஓவரின் 5-வது பந்தில் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார். இந்த 4 விக்கெட்டுக்களையும் போல்ட்தான் வீழ்த்தினார். 5-வது விக்கெட்டுக்கு கெய்ல் உடன் கார்ட்டர் ஜோடி சேர்ந்தார். 11-வது ஓவரை சவுத்தி வீசினார். இந்த ஓவரில் கெய்ல் இரண்டு சிக்சர் விளாசினார். வெஸ்ட்இண்டீஸ் 11.5 ஓவரில் 100 ரன்னை கடந்தது. 13-வது ஓவரில் கெய்ல் பவுண்டரி அடித்து அரைசதத்தை கடந்தார். அவர் 26 பந்தில் 2 பவுண்டரி, 7 சிக்சர் அரை சதம் அடித்தார்.
தொடர்ந்து விளையாடிய கெய்ல் 61 ரன்னில் மில்லேன் பந்தில் க்ளீன் போல்ட் ஆனார். கெய்ல் 33 பந்தில் 8 சிக்சர், 2 பவுண்டரியுடன் இந்த ரன்னை எடுத்தார். கெய்ல் அவுட்டாகும்போது வெஸ்ட் இண்டீஸ் அணி 16.1 ஓவரில் 120 ரன்கள் எடுத்திருந்தது.அடுத்து சமி களம் இறங்கினார். தான் சந்தித்த முதல் இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார். வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அனைவரும் தடுப்பு ஆட்டத்தில் ஈடுபடாமல் அதிரடியாகவே விளையாடினார்கள். இதனால் ரன் விகிதம் ஜெட் வேகத்தில் உயர்ந்தாலும் விக்கெட்டுக்க்கள் சீரான இடைவெளியில் விழுந்து கொண்டிருந்தது.வெட்டோரி வீசிய 19-வது ஓவரில் சமி இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். போல்ட் வீசிய அடுத்த ஓவரில் மேலும் ஒரு சிக்ஸ் அடித்தார். ஆனால், ஆண்டர்சன் வீசிய 22-வது ஓவரில் சமி அவுட் ஆனார். அவர் 16 பந்தில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 27 ரன்கள் எடுத்தார். அடுத்து கார்ட்டர் உடன் ரசல் ஜோடி சேர்ந்தார். கார்ட்ர் 23-வது ஓவரில் வெட்டோரி பந்தில் க்ளீன் போல்டானார்.
அடுத்து 8-வது விக்கெட் ஜோடியாக ரசல் உடன் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் ஜோடி சேர்ந்தார். 24-வது ஓவரில் ஹோல்டர் ஒரு பவுண்டரி அடிக்க ரசல் இரண்டு சிக்சர் விரட்டினார். இதற்கிடையே வெஸ்ட் இண்டீஸ் 24.4 ஓரில் 200 ரன்னைத் தொட்டது. ரசல் 26-வது ஓவரில் அவுட் ஆனார். அவர் 16 பந்தில் 2 சிக்சர், 1 பவுண்டரியுடன் இந்த ரன்னை எடுத்தார்.அடுத்து 9-வது விக்கெட்டுக்கு ஹோல்டருடன் டெய்லர் ஜோடி சேர்ந்தார். டெய்லரும் தான் சந்தித்த முதல் இரண்டு பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால், சவுதி வீசிய 28-வது ஓவரில் டெய்லர் 11 ரன்னில் அவுட் ஆனார். கடைசி விக்கெட்டாக பென் களம் இறங்கினார். 29-வது ஓவரை மில்னே வீசினார். இந்த ஓவரில் ஹோல்டர் தொடர்ச்சியா 3 பவுண்டரிகள் விளாசினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 30 ஓவரில் 250 ரன்னைத் தொட்டது. ஆனால், வெட்டோரி வீசிய 31-வது ஓவரின் 3-வது பந்தில் ஹோல்டர் அவுட் ஆனார். அவர் 26 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 42 ரன்கள் எடுத்தார். இவர் அவுட்டைத்தொடர்ந்து வெஸ்ட்இண்டீஸ் 250 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அரையிறுதிக்கு தகுதிப்பெற்று வரும் 25-ந்தேதி அரை இறுதியில் தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி