தனது மகளை கவுரமாகவும் அருமை பெருமையாகவும் வளர்க்க விரும்பினார். பெண்ணான தான் வேலைக்கு செல்ல விரும்பினார். ஆனால் ஆண்களின் கழுகு பார்வையில் இருந்து தப்ப ஒரு தீர்க்கமான முடிவு எடுத்தார்.ஒரு ஆண் போன்று வேடம் அணிந்தார். மிகவும் தளர்ந்த உடைகளை அணிந்தார். தனது சிகை அலங்காரத்தை மாற்றினார். செங்கல் சூளை வேலைக்கு சென்றார். கட்டிட வேலைக்கு சென்றார்.அங்கு சிமெண்டு, மணல் மற்றும் செங்கற்களை சுமந்து கஷ்டப்பட்டார். தெரு வீதிகளில் ‘ஷு’க்களுக்கு பாலிஷ் போட்டார். அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் தனது மகளை வளர்த்து படிக்க வைத்தார்.
இது போன்றே தனது 43 வருட வாழ்க்கையை கழித்தார். அதன் பின்னர் வேடத்தை கலைத்து பெண்ணாக வாழ விரும்பினார். ஆனால் அவரது மகள் ‘ஹுடா’வுக்கு திருமணமாகி குழந்தை பிறந்தது. ஆனால் ‘ஹுடா’ நோய் வாய்ப்பட்டு படுத்தபடுக்கையானார். எனவே, மீண்டும் தொடர்ந்து ஆண் வேடத்திலேயே பணிகளை தொடர்ந்து தனது மகளையும், குடும்பத்தையும் காப்பாற்றி வருகின்றார். அவரது சேவையை பாராட்டி அவருக்கு சமூக சேவை நிறுவனம் லட்சியதாய் விருது வழங்கி கவுரவித்தது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி