3-வது விக்கெட்டுக்கு குப்தில் உடன் டெய்லர் களம் இறங்கினார். குப்தில் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய குப்தில் 111 பந்தில் 12 பவுண்டரியுடன் சதம் அடித்தார். அவருக்கு துணையாக விளையாடிய டெய்லர் 42 ரன்னில் ரன் அவுட் ஆனார்.சதம் அடித்த குப்தில் ஆட்டத்தில் அனல் பறந்தது. அவர் மேலும் 23 பந்தில் 6 பவுண்டரி 3 சிக்சருடன் 50 ரன் அடித்து 150 ரன்களை கடந்தார்.டெய்லர் அவுட் ஆனதும் 4-வது விக்கெட்டுக்கு ஆண்டர்சன் ஜோடி சேர்ந்தார். ஆண்டர்சன் 16 பந்தில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 15 ரன்கள் எடுத்து ரசல் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த எலியாட் 11 பந்தில் இரண்டு பவுண்டரி, இரண்டு சிக்சருடன் 27 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து ரோஞ்சி களம் இறங்கினார்.
ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் குப்தில் அதிரடியாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். குப்தில் 152 பந்தில் 21 பவுண்டரி 8 சிக்சருடன் இந்த ரன்னை கடந்தார். அதன்பின்பும் அதிரடி காட்டினார். இதனால் நியூசிலாந்து ரன் விகிதம் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.ரோஞ்சி 5 பந்தில் இரண்டு பவுண்டரியுடன் 9 ரன்னில் அவுட் ஆனார். 7-வது விக்கெட்டுக்கு குப்தில் உடன் வெட்டோரி ஜோடி சேர்ந்தார். நியூசிலாந்து 50 ஓவர் முடிவில் 393 ரன்கள் குவித்தது. 237 ரன்னுடனும், வெட்டோரி 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 19-வது ஓவரில் நியூசிலாந்து அணி 100 ரன்னை தொட்டது. 36-வது ஓவரில் 200 ரன்னைக் கடந்தது. கடைசி 14 ஓவரில் 193 ரன்கள் குவித்துள்ளது நியூசிலாந்து.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி