இஸ்லாமாபாத்:-பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்து சிறைபிடித்திருந்த 57 படகுகள் இன்று விடுவிக்கப்பட்டன. இதற்கான பூர்வாங்க பேச்சுவார்த்தை நரேந்திர மோடியின் பதவி ஏற்பு விழாவின்போது கடந்த ஆண்டு புது டெல்லி வந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புடன் நடத்தப்பட்டதாகவும் அதன் அடிப்படையில் இந்த படகுகள் விடுவிக்கப்பட்டதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
சிறைபிடிக்கப்பட்ட படகுகளை பார்வையிட்டு விடுவிக்க கடந்த 9-ம் தேதி இந்திய அதிகாரிகள் பாகிஸ்தான் சென்றனர். அப்போது இந்திய மீனவர்களின் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருந்தன. சில படகுகளில் இருந்த சிறிய கோளாறுகளை சரிபார்த்து கடல் பயணத்துக்கு ஏற்ற வகையில் பாகிஸ்தான் அதிகாரிகள் துணையாக இருந்தனர் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி