இதன் பிறகு ஆஸ்திரேலியா பேட் செய்த போது வஹாப் ரியாஸ் பதிலடி கொடுத்தார். குறிப்பாக வாட்சன் களத்தில் நின்ற போது, அவருக்கு பவுன்சர்களாக போட்டு அச்சுறுத்தினார். அதுவும் ரன் எடுக்க முடியாமல் திணறிய போதெல்லாம் அவரது முகம் அருகே கைதட்டி உசுப்பேற்றினார் ‘முடியாவிட்டால் வெளியேறு’ என்றும் கேலி செய்தார். இவ்வாறு ஆட்டம் பரபரப்புக்கும், முறைப்புக்கும் பஞ்சமில்லாமல் நகர்ந்தது.
* பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல்-ஹக் ரன் கணக்கை தொடங்கும் முன்பே வெளியேறி இருக்க வேண்டியது. ஹாஸ்லேவுட் வீசிய பந்து அவரது தொடையில் பட்டபடி லெக் ஸ்டம்பை தாக்கியது. ஆனால் ஸ்டம்பு மீது இருந்த பெய்ல்ஸ் ஒளிர்ந்ததே தவிர கீழே விழவில்லை. இதனால் அவுட் வாய்ப்பில் இருந்து தப்பித்தார்.
* பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல்-ஹக், ஆல்-ரவுண்டர் அப்ரிடி ஆகியோர் ஏற்கனவே உலக கோப்பையுடன் ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தனர். இதன்படி அவர்களது ஒரு நாள் கிரிக்கெட் வாழ்க்கை ஏமாற்றத்துடன் முடிவுக்கு வந்தது. தனது கடைசி இன்னிங்சில் 34 ரன்கள் எடுத்த 40 வயதான மிஸ்பா உல்-ஹக் இதுவரை 162 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 42 அரைசதத்துடன் 5,122 ரன்கள் சேர்த்துள்ளார். 5 ஆயிரத்திற்கு மேல் ரன் குவித்தும் சதம் அடிக்காத ஒரே வீரர் இவர் தான்.
35 வயதான அப்ரிடி 398 ஆட்டங்களில் 8,064 ரன்களும், 395 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். ஆனால் இந்த உலக கோப்பையில் அப்ரிடி 57 ஓவர்கள் பந்து வீசி 282 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். உலக கோப்பையில் அவரது மோசமான பந்து வீச்சு இதுவாகும். மிஸ்பா உல்-ஹக் டெஸ்டிலும், அப்ரிடி 20 ஓவர் போட்டியிலும் தொடர்ந்து விளையாட உள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி