சென்னை:-கடந்த 2012ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘நான் ஈ’. இப்படம் ஈகா என்ற பெயரில் தெலுங்கில் தயாரிக்கப்பட்டாலும், இந்திய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது இப்படம் ‘ஸ்வாஹிலி’(SWAHILI) எனும் மொழியில் டப் செய்யப்பட்டு ரிலீஸாக இருக்கிறது. கிழக்கு ஆப்பிரிக்கா, தான்ஸானியா, கென்யா, உகாண்டா, வாண்டா, புருன்டி, காங்கோ உள்ளிட்ட ஆப்பிரிக்கா நாடுகளில் வெளியாகும் இப்படத்திற்கு ‘இன்ஸி’ (INZI) என டைட்டில் வைத்திருக்கிறார்கள்.
அதன் கீழே ‘கிஸாஸி சா விஷோ’ (Kisasi Cha Mwisho) என டேக் லைனும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு ‘ஈயின் உச்சகட்ட பழிவாங்கல்’ என அர்த்தமாம். தான்ஸானியாவைச் சேர்ந்த ஸ்டெப்ஸ் என்டர்டெயின்மென்ட் எனும் நிறுவனம் ‘ஈகா’வின் ‘ஸ்வாஹிலி’ மொழிப் படத்தை ஆப்பிரிக்க நாடுகளில் வெளியிடுகிறது. தெலுங்கு படங்களில் ஸ்வாஹிலி என்ற மொழியில் டப் செய்யப்பட்டு வெளியாகும் முதல் படம் இதுதானாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி