எஸ்பினாலின் வளர்ப்பு தாய் பாத்ரூமிலிருந்து வெளியே வருமாறு கூறிய போதிலும், அதற்கு அவன் செவிசாய்க்கவில்லை. இதையடுத்து 911 அவசர காவல்துறை தொடர்பு எண்ணுக்கு அந்த வளர்ப்பு தாய் தகவல் கொடுத்தார். விரைந்து வந்த போலீசார் பாத்ரூம் கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்தபோது அங்கு ஏற்கனவே சிறுவன் ஸ்டுவர்ட் விஷம் கலந்த உணவை உண்டதால், நீரில் மூழ்கிய நிலையில் இறந்து போயிருந்தான். எஸ்பினாலை மீட்ட போலீசார் அவனை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சைக்கு பின் குணமான அவன் மீது போலீசார் வழக்கு தொடுத்தனர். கணவனால் தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து எஸ்பினாலின் மனைவி ஏப்ருவ் கூறுகையில், இந்த கொடூரமான கொலை என்னையும், எனது மகளையும் மிகுந்த கலக்கத்திற்கு உள்ளாக்கியது. எனது மகனை நான் கடைசியாக பார்த்தபோது அவனது முகம் பிரகாசமாக இருந்தது.
நான் வீட்டை விட்டு அன்றைய தினம் கிளம்பும் போது, என்னை பின் தொடர்ந்து வீட்டின் கதவு வரை வந்தான். நான் முழந்தாள் மண்டியிட்டு அவனிடம் அன்புடன் பேசினேன். ஏனென்றால் நான் என் மகனை உயிருடன் பார்க்கும் கடைசி தருணம் அது தான் என்று எனது இதயத்திற்கு தெரிந்திருந்தத என மகனை பிரிந்து தாய் படும் வேதனையை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தினார்.மியா வாந்தி எடுத்தவுடன் அவளை மருத்தவமனைக்கு அழைத்துச்செல்லுமாறு தான் வற்புறுத்தப்பட்டதாக கூறிய ஏப்ருவ், இனி வரும் காலங்களில் தந்தையே தன்னை கொல்ல முயன்ற கொடூர நினைவுகளுடன், மியா தனது வாழ்க்கையை கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதை வருத்தத்துடன் தெரிவித்தார். எனினும் உளவியல் சிகிச்சை வழங்கப்பட்டதால், தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பிலிருந்து ஓரளவு தற்போது மீண்டு வந்திருப்பதாக ஏப்ருவ் கூறினார். இந்த வழக்கில் கடந்த மாதம் தீர்ப்பளித்த அந்நாட்டு உச்சநீதிமன்றம் எஸ்பினாலுக்கு 20 வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி