சென்னை:-இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். அந்த வகையில் நடிகர் சூர்யாவின் சம்பளம் கிட்டத்தட்ட ரஜினியை நெருங்கி விட்டது. தற்போது இவர் நடித்து வரும் மாஸ் படத்தை ஞானவேல் ராஜா தான் தயாரித்து வருகிறார். இப்படத்தின் தெலுங்கு வெளியிட்டு உரிமை, சாட்டிலைட் ரைட்ஸ் என்று ஏதெனும் ஒன்று சூர்யாவிற்கு சென்று விடுமாம்.
இதை தொடர்ந்து மேலும் இரண்டு படங்கள் ஞானவேல் ராஜா தயாரிப்பில் நடிக்கவிருக்கின்றாராம். ஆக மொத்தம் இந்த மூன்று படங்களின் சம்பளத்தை சேர்த்தால், இந்த வருடத்தில் மட்டும் சூர்யாவின் சம்பளம் ரூ 100 கோடியை தொடுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி