சியாரா லியான் நாட்டில் எபோலா நோய் மிக கடுமையாக பரவி வருகிறது. இங்கு மட்டும் 3500 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த நோயை வருகிற ஏப்ரல் 15–ந் தேதிக்குள் முழுமையாக கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்காக வருகிற 27 முதல் 29–ந் தேதி வரை 3 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சியாரா லியானில் பிரீடவுன் மற்றும் வடக்கு மாவட்டங்களான பம்பாலி மற்றும் போர்ட்லோகோ ஆகிய 3 பகுதிகளில் அதிக அளவில் இந்நோய் தாக்கியுள்ளது. எனவே, இங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தபட உள்ளது.
இந்த 3 பகுதிகளிலும் வாழும் 25 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வீடுகளில் சிறை வைக்கப்படுகின்றனர். இதற்கிடையே, சுகாதார ஊழியர்கள் வீடு, வீடாக சென்று எபோலா நோய் தாக்கியவர்களை கண்டு பிடித்து அப்புறப்படுத்துவார்கள். அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க உள்ளனர். உயிரிழந்தவர்களை பாதுகாப்பான முறையில் அடக்கம் செய்வார்கள். அதன் மூலம் எபோலா நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி