சிலரோ அவர் இறந்து விட்டதாகவும், புரட்சி மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டதாகவும் பேசினர். சமீபத்தில் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்த புதினுக்கும், 31 வயதான ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீரங்கனை அலினா கபயேவாவுக்கும் தொடர்பு இருப்பதாகவும் அந்த பெண் சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் குழந்தை பெற்றதால் வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் அவருடன் புதின் தங்கியிருப்பதாகவும் தகவல்கள் பரவின. ஆனால் இதை ரஷிய அதிகாரிகள் மறுத்தனர். இந்நிலையில் நேற்று புதின் பொது இடத்தில் தோன்றினார். ரஷியாவின் 2–வது பெரிய நகரமான செயிண்ட் பீட்டர்ஸ் பர்க் நகரில் நடந்த நிகழ்ச்சியில் கிரிஸ்தான் அதிபர் அல்மாபெக் அதம்பயேவுடன் பங்கேற்ற நிகழ்ச்சி டி.வியில் ஒளிபரப்பப்பட்டது.
அதை தொடர்ந்து மாஸ்கோவின் கிரம்ளின் மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது இது குறித்து அவரிடம் கேட்டதற்கு, பலமாக வாய்விட்டு சிரித்த அவர், அது போன்ற ‘கிசு கிசு’க்கள் இல்லாவிட்டால் எனக்கு போரடித்து விடும் என்றார். மேலும் வடக்கு ரஷியாவில் ஆர்டிக்கடல் பகுதியில் ரஷிய கடற்படை போர் பயிற்சி ஒத்திகை நடத்தவும் உத்தரவிட்டார். அதில் 45 ஆயிரம் ராணுவ வீரர்கள் பங்கேற்றுள்ளனர். போர் விமானங்கள் மற்றும் நீர் மூழ்கி கப்பல்களும் இடம் பெற்றுள்ளன. இது போன்ற நடவடிக்கைகளின் மூலம் தன் மீதான வதந்திக்கு புதின் முற்றுப்புள்ளி வைத்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி