சென்னை:-நடிகை அனுஷ்கா தற்போது தெலுங்கில் ருத்ரமாதேவி, பாஹுபலி போன்ற பிரமாண்ட படங்களில் நடித்து ரிலிஸுக்கு காத்திருக்கிறார். இப்படத்தை தொடர்ந்து பிவிபி நிறுவனத்திற்காக ஜீரோ சைஸ் என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார்.
இப்படத்திற்காக உடல் எடையை அனுஷ்கா அதிகப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்திற்கு தமிழில் ‘இஞ்சி இடுப்பழகி’ என்று பெயரிட்டுள்ளார்களாம். தேவர் மகன் படத்தில் கமல்ஹாசன் பாடும் பாடலின் வரியை படத்தின் தலைப்பாக வைத்துள்ளார்கள். ஆனால், இந்த தலைப்பு பெண்களை மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக உள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி