செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு உலகக்கோப்பை லீக் சுற்று முடிவில் டாப் ரன் குவிப்பாளர்கள் – ஒரு பார்வை…

உலகக்கோப்பை லீக் சுற்று முடிவில் டாப் ரன் குவிப்பாளர்கள் – ஒரு பார்வை…

உலகக்கோப்பை லீக் சுற்று முடிவில் டாப் ரன் குவிப்பாளர்கள் – ஒரு பார்வை… post thumbnail image
மெல்போர்ன்:-உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கிய லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்தது. 14 அணிகள் ‘ஏ’, ‘பி’ என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. ஒரு பிரிவில் உள்ள ஒரு அணி அதே பிரிவில் உள்ள அணியுடன் தலா ஒரு போட்டியில் மோத வேண்டும். அதன்படி மொத்தம் 42 ‘லீக்’ போட்டிகள் நடைபெற்றது. ஒவ்வொரு அணிகளும் 6 லீக் போட்டிகளில் மோதின.

இதன் அடிப்படையில் இலங்கையின் விக்கெட் கீப்பர் சங்ககரா 6 போட்டிகளில் விளையாடி 496 ரன்கள் குவித்து அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். இதில் 4 சதங்கள் அடங்கும். சங்ககராவிற்கு அடுத்தப்படியாக நியூசிலாந்து கேப்டன் மெக்கல்லம் 433 ரன்கள் குவித்துள்ளார். இதில் இரண்டு சதம் மற்றும் ஒரு அரை சதம் ஆகும். 3-வதாக டி வில்லியர்ஸ் ஒரு சதம், இரண்டு அரை சதத்துடன் 417 ரன்கள் குவித்து 3-வது இடத்தில் உள்ளார். இலங்கை வீரர் தில்ஷன் 395 ரன்களுடன் 4-வது இடத்திலும், வங்காள தேச வீரர் மெக்முதுல்லா 5 போட்டியில் 344 ரன்களுடன் 5-வது இடத்திலும் உள்ளனர். இந்த 5 பேரும் இடம்பெற்றுள்ள அணிகள் கால் இறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளன. இதனால் அவர்கள் இன்னும் அதிக ரன்கள் அடிக்க வாய்ப்பு உள்ளது.

இவர்களுக்கு பிறகு ஜிம்பாப்வே வில்லியம்ஸ் 339 ரன்களுடன் 6-வது இடத்திலும், இந்திய வீரர் தவான் 337 ரன்களுடன் 7-வது இடத்திலும், பாகிஸ்தான் வீரர் மிஸ்பா உல் ஹக் 316 ரன்னுடன் 8-வது இடத்திலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வீரர் அன்வர் 311 ரன்களுடன் 9-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்கா வீரர் அம்லா 307 ரன்களுடன் 10-வது இடத்திலும், உள்ளனர். இந்திய வீரர் கோலி 301 ரன்களுடன் 11-வது இடத்தில் உள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி