புது டெல்லி:-ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோர் மீது சுரேந்தர் ஷர்மா என்ற வழக்கறிஞர் கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றியதாக டெல்லி கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது கெஜ்ரிவால், சிசோடியா, யோகேந்திர யாதவ் ஆகியோர் நேரில் ஆஜராகவில்லை. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி மதியம் 2 மணிக்குள் கெஜ்ரிவால் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதனையடுத்து, இன்று பிற்பகல் கோர்ட் மீண்டும் கூடியபோது அரவிந்த் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா, யோகேந்திரா யாதவ் ஆகியோர் நீதிபதியின் முன்னர் ஆஜராகினர். இவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்வது தொடர்பான உத்தரவு வரும் மே மாதம் பிறப்பிக்கப்படும் என அறிவித்த நீதிபதி இவ்வழக்கின் மறு விசாரணையை மே 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி