சென்னை:-2 வருடத்துக்கு முன் அலர்ஜியால் பாதிக்கப்பட்டு டிரீட்மென்ட்டில் இருந்த நடிகை சமந்தா, தனது தோற்றத்தை ஃபிட்டாக வைத்துக்கொள்வதற்கான பயிற்சியில் ஈடுபட முடியாமல் இருந்துவந்தார். தற்போது ராஜேஷ் என்ற பயிற்சியாளரை அமர்த்தி பிரத்யேகமாக ஃபிட்னஸ் பயிற்சி பெற்று வருகிறார். படப்பிடிப்புக்காக சமந்தா எந்த வெளியூருக்கு சென்றாலும் அவருடனே செல்கிறார் ராஜேஷ். காலை 7 மணிக்கு படப்பிடிப்புக்கு கால்ஷீட் கொடுத்திருந்தால் அதிகாலை 5 மணிக்கெல்லாம் உடற்பயிற்சிக்கு தயாராகிவிடுகிறார் சமந்தா.
இதுபற்றி பயிற்சியாளர் ராஜேஷ் கூறும்போது, சமந்தாவின் உடல் தோற்றம் வசீகரமானதாக மாறுவதற்காக உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு மேற்கொண்டிருக்கிறார். இயற்கை உரங்களால் வளர்க்கப்பட்ட புரோட்டின் சத்துக்கள் நிறைந்த காய்கறி, பழ வகைகளை மட்டுமே அவர் உண்கிறார். மேலும் பயிற்சியை மேற்கொள்வதில் மிகவும் ஈடுபாடுடன் உள்ளார். எப்போதுமே 15 நிமிடத்துக்கு முன்பே பயிற்சிக்கு தயாராகிவிடுவார். காலையில் படப்பிடிப்பில் பங்கேற்கும்போது அதற்கேற்ப எனர்ஜி அளவை கூட்டுவதற்காக இலகுவான பயிற்சிகள் மட்டுமே தரப்படுகிறது. அதனாலேயே அவர் எங்கு சென்றாலும் நானும் உடன் செல்கிறேன் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி