சென்னை:-‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் என்றாலே அனைவரிடத்திலும் ஒருவித ஈர்ப்பு தான். தமிழ் சினிமா மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஏன் ஜப்பான் வரை இவருடைய ரசிகர்களுக்கு எல்லையே இல்லை. ஆனால், ரஜினியை நல்ல கதையம்சம் கொண்ட படத்தில் பார்த்து நீண்ட நாட்களாகவிட்டது. தற்போதெல்லாம் சிவாஜி, எந்திரன், கோச்சடையான் என பிரமாண்டத்திற்கே ரஜினி முன்னுரிமை கொடுக்கிறார் என ஒரு கருத்து நிலவுகிறது.
இது குறித்து ரஜினி ஒரு பேட்டியில் கூறுகையில், பிரமாண்டம் என்றும் நிலையானது இல்லை, பாரதிராஜா இயக்கிய கிழக்கு சீமையிலே படத்தில் என்ன பிரமாண்டம் இருந்தது, ஆனால், படம் ஹிட் ஆனது. அது போல் ஒரு படத்தின் வெற்றிக்கு கதை மட்டும் இருந்தால் போதும், பிரமாண்டம் தேவையில்லை, அதை தான் நானும் விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி