செய்திகள்,விளையாட்டு இந்தியா அபார பந்துவீச்சு – அயர்லாந்து 259 ரன்னில் ஆல்அவுட்!…

இந்தியா அபார பந்துவீச்சு – அயர்லாந்து 259 ரன்னில் ஆல்அவுட்!…

இந்தியா அபார பந்துவீச்சு – அயர்லாந்து 259 ரன்னில் ஆல்அவுட்!… post thumbnail image
ஹேமில்டன்:-உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் 34–வது ‘லீக்’ ஆட்டம் நியூசிலாந்தில் உள்ள ஹேமில்டன் நகரில் இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு தொடங்கியது. இதில் ‘பி’ பிரிவில் உள்ள இந்தியா– அயர்லாந்து அணிகள் மோதின.அயர்லாந்து கேப்டன் வில்லியம் போர்ட்டர் பீல்டு ‘டாஸ்’ வென்று தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். அவரும், பால்ஸ்டிர்லிங்கும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.இந்திய வேகப்பந்து வீரர்கள் நேர்த்தியுடன் பந்துவீச சிரமப்பட்டதால் அயர்லாந்து அணியின் தொடக்கம் சிறப்பாக அமைந்தது. இதனால் 7.5–வது ஓவரிலேயே அந்த அணி 50 ரன்னை தொட்டது.

தொடக்க ஜோடியை சுழற்பந்து வீரர் அஸ்வின் பிரித்தார். ஆட்டத்தின் 15–வது ஓவரில் தான் தொடக்க ஜோடி பிரிந்தது. பால்ஸ்டிரிலிங் 41 பந்தில் 42 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். இதில் 4 பவுண்டரியும், 2 சிக்சரும் அடங்கும். அப்போது ஸ்கோர் 89 ஆக இருந்தது.அடுத்து களம் வந்த அதிரடி பேட்ஸ்மேன் எட்ஜாய்சை, ரெய்னா சாய்த்தார். அவர் 2 ரன்களே எடுத்தார்.3–வது விக்கெட்டான போர்ட்டர் பீல்டு– நீல் ஒபிரையன் ஜோடி சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தது. போர்ட்டர் பீல்டு 65 பந்தில் 50 ரன்னை எடுத்தார். அவரது 11–வது அரை சதம் ஆகும். அவரது விக்கெட்டை மொகித்சர்மா கைப்பற்றினார்.
போர்ட்டர் பீல்டு 67 ரன்கள் எடுத்தார். இதில் 5 பவுண்டரியும், 1 சிக்சரும் அடங்கும். அப்போது ஸ்கோர் 145 ஆக இருந்தது. அடுத்து பால்பிரீனி களம் வந்தார். இந்த ஜோடி பேட்டிங் பவர்பிளேயில் அதிரடியாக விளையாடியது. இதனால் அந்த அணி 38.2–வது ஓவரில் 200 ரன்னை தொட்டது.இதனால் அயர்லாந்து 300 ரன்னுக்கு மேல் தாண்டிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. ஆனால் இந்திய பவுலர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டு அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

39–வது ஓவரில் இருந்து அயர்லாந்து அணி விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. பால்பிரீனி 24 ரன்னில் அஸ்வின் பந்தில் வெளியேறினார். அடுத்து வந்த நம்பிக்கை நட்சத்திர வீரர் கெவீன் ஓபிரையன் விக்கெட்டை 1 ரன்னில் முகமது ஷமி கைப்பற்றினார்.அதிரடி பேட்ஸ்மேன் நீல் ஒபிரையன் விக்கெட்டையும் முகமது ஷமியே கைப்பற்றினார். அவர் 75 பந்தில் 75 ரன்கள் எடுத்தார். இதில் 7 பவுண்டரியும், 3 சிக்சரும் அடங்கும்.அயர்லாந்து அணி 49 ஓவரில் 259 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. கடைசி விக்கெட் ஜோடி 21 ரன்கள் வரை எடுத்ததால் அந்த அணி 250 ரன்னுக்கு மேல் எடுக்க முடிந்தது. இந்திய வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் அயர்லாந்து அணியின் கடைசி 6 விக்கெட்டுகள் 53 ரன்னில் சரிந்தன. முகமது ஷமி 3 விக்கெட்டும், அஸ்வின் 2 விக்கெட்டும், உமேஷ் யாதவ், மொகித்சர்மா, ஜடேஜா, ரெய்னா தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். 260 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி