உமேஷ் யாதவ் வீசிய 2–வது ஓவரில் 1 ரன் எடுத்தனர். 5–வது ஓவரில் முதல் விக்கெட் விழுந்தது. முகமது ஷமி பந்தில் டோனியிடம் கேட்ச் கொடுத்து ஸ்மித் அவுட் ஆனார். அவர் 6 ரன் எடுத்தார். அடுத்து சாமுவேல்ஸ் களம் வந்தார். உமேஷ்யாதவ் வீசிய 8–வது ஓவரில் கிறிஸ்கெய்ல் பந்தை தூக்கி அடித்தார். கஷ்டமான இந்த கேட்சை மொகித்சர்மா பிடிக்க தவறினாலும் பந்தை ஸ்டம்பை நோக்கி எறிந்தார். அதை கோலி பிடித்து சாமுவேல்சை ரன் அவுட் ஆக்கினார். அப்போது ஸ்கோர் 15 ரன்னாக இருந்தது.
அந்த ஓவரில் கிறிஸ்கெய்ல் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். ஆனால் அவரது அதிரடி நீடிக்கவில்லை. முகமது ஷமி பந்தில் அவுட் ஆனார். கிறிஸ்கெய்ல் 21 ரன் (27 பந்து 2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். அடுத்து களம் வந்த ராம்தின் தான் சந்தித்த முதல் பந்திலேயே போல்டு ஆனார். அவரது விக்கெட்டை மொகித்சர்மா கைப்பற்றினார். அப்போது ஸ்கோர் 4 விக்கெட் இழப்புக்கு 35 ரன்னாக இருந்தது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி