கலிபோர்னியா:-அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகரான ஹாரிசன் போர்டு ஓட்டிச்சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில், அவர் படுகாயமடைந்தார். போர்டு ஓட்டிச்சென்ற சிறிய ரக விமானம் கலிபோர்னியாவின் வெனிஸ் அருகே விபத்தில் சிக்கியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து அபாய கட்டத்தை தாண்டி தற்போது உடல்நிலை தேறி வருகிறார். தற்போது 72 வயதாகும் போர்டு, 55 வருட பைலட் அனுபவம் உடையவராவார். இதே போல் கடந்த 1999 ஆம் ஆண்டு போர்டு ஓட்டிச்சென்ற ஹெலிகாப்டர், சாண்டா கிளாரிட்டா அருகே விபத்துக்குள்ளானது. அதிலும் அவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். ஆனால் ஹெலிகாப்டர் முற்றிலும் சேதமடைந்தது. ஸ்டார் வார்ஸ், பிளேட் ரன்னர், விட்னஸ் மற்றும் பேட்ரியாட் கேம்ஸ் போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் போர்டு என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி