இதை கவனித்த அந்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து போலீசில் புகார் அளித்தனர். இதற்குள் இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட உள்ளூர் மக்கள் பள்ளியில் புகுந்து அந்த ஆசிரியரை அடித்து உதைத்தனர். போலீசார் வந்து கைது செய்யும் வரை அவரை வகுப்பறையிலேயே பூட்டி வைத்தனர்.
அப்போது, தல்ஜித் சிங் இதற்கு முன்பும் ஒரு மாணவியின் நோட்டுப்புத்தகத்தில் பாலியல் இச்சையை தூண்டும் வண்ணம் எழுதி அதற்காக மன்னிப்பு கேட்டிருப்பதும் தெரிய வந்தது.
குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட தல்ஜித் சிங்கை, காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கல்வித்துறை அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி