சென்னை:-9வது படித்தபோது கும்கியில் அறிமுகமான மலையாள நடிகை லட்சுமிமேனன், அதன்பிறகு சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகர் தண்டா, கொம்பன் என பல படங்களில் நடித்தார். இந்த படங்கள் எல்லாமே ஹிட் அடித்தன. இருப்பினும், சினிமாதான் ஒர்க் அவுட் ஆகி விட்டதே என்று அவர் பள்ளியில் படிப்பதை விடவில்லை.
சில ஆண்டுகளாக படித்துக்கொண்டே நடித்து வந்தவர், இந்த ஆண்டு ப்ளஸ்-2 படித்து வந்தார். அதோடு கொம்பன் படத்தில் நடித்து முடித்த கையோடு, ரெகுலர் கிளாசுக்கும் செல்லத் தொடங்கிய லட்சுமிமேனன், நேற்று முதல் ப்ளஸ்-2 தேர்வெழுதி வருகிறார். அதோடு, இனிமேல் புதிய படங்களில் நடிப்பதற்கான கதை கேட்பதையும் பரீட்சை முடிந்த பிறகுதான் தொடங்குவாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி