செய்திகள் பிறந்தநாளைக் கொண்டாடினார் உலகின் வயதான பெண்!…

பிறந்தநாளைக் கொண்டாடினார் உலகின் வயதான பெண்!…

பிறந்தநாளைக் கொண்டாடினார் உலகின் வயதான பெண்!… post thumbnail image
டோக்கியோ:-ஜப்பானை சேர்ந்த உலகின் வயதான பெண் மிசாவோ ஒகாவா தனது 117-வது பிறந்தநாளை இன்று தன் குடும்பத்தினருடன் கொண்டாடினார். அவரின் பிறந்தநாள் விழாவை அந்நாட்டு தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. அவரின் நீண்ட ஆயுளின் இரகசியத்தை பற்றி எப்போது கேட்டாலும், எனக்கே ஆச்சரியமாகத்தான் உள்ளது என்ற பதிலைத்தான் கூறுகிறார்.

தினமும் மூன்று வேளை அரிசி சாதமும், 8 மணி நேரம் தூங்குவதும் அவரது வழக்கம். சில மாதங்களாக அவரின் கேட்கும் திறன் மட்டும் குறைந்திருப்பதாகவும் மற்றப்படி அவர் நலமுடன் இருப்பதாகவும் அவர் தங்கியிருக்கும் முதியோர் விடுதியின் பணியாளர் தெரிவித்துள்ளார்.

2013 முதல் உலகின் வயதான நபர் என்கிற கின்னஸ் சாதனை ஒகாவா வசம் உள்ளது. மார்ச் 1898-ல் பிறந்த ஒகாவா மூன்று நூற்றாண்டுகளிலும் வாழ்ந்த சில நபர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு மூன்று குழந்தைகள், நான்கு பேரக்குழந்தைகள், ஆறு கொள்ளு பேரக்குழந்தைகள் உள்ளனர். 117 ஆண்டுகள் என்பது நீண்ட காலம் இல்லையா?… என்று கேட்டதற்கு, அப்படி ஒன்றும் அதிகம் இல்லை என்று சாதாரணமாக கூறுகிறார் இந்த சாதனை பாட்டி.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி