சென்னை:-தென்னிந்திய சினிமாவில் அனைவரிடத்திலும் அன்பாக பழக கூடியவர்களில் நடிகர் அஜித்தும் ஒருவர். சமீபத்தில் அஜித்-ஷாலினி தம்பதியினருக்கு சென்னையின் பிரபல மருத்துவமனை ஒன்றில் ஆண் குழந்தை பிறந்தது.
அதே மருத்துவமனையில் ஒரு அறுவை சிகிச்சைக்காக நடிகர் விஷ்ணு அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை அறிந்த அஜித் நேற்று அவரை சென்று பார்த்து நலம் விசாரித்துள்ளார்.
இதுகுறித்து விஷ்ணு கூறுகையில், அஜித் சார் என்னை பார்க்க வந்த போது நான் ஆச்சரியத்தில் ஆழ்ந்தேன், மிகவும் எளிமையான மனிதர் அவர் என்று கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி