இந்தியாவின் 200 மில்லியன் ஆல்-லைன் பயனாளர்களை நேரடியாக தொடர்பு கொள்ள சமூக வலைதளத்தை பிரதமர் மோடி விலைமதிப்பில்லாதது என்று கருதுகிறார். டைம் ஆய்வின்படி பிரதமர் மோடியை டுவிட்டர், பேஸ்புக் போன்ற வலைப்பக்கங்களில் 3.8 கோடி பேர் பின்தொடர்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் இந்திய வருகை தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை முதலில் தனது டுவிட்டர் பக்கத்திலேயே வெளியிட்டார் என்பதையும் டைம் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது. சமூக வலைதளங்களுடன், இணையதள இணைப்பு கொண்ட எவரும் உலகம் முழுவதுமான உரையாடலை தொடங்க முடியும் என்று டைம் தெரித்துள்ளது.
பேஸ்புக்கில் அதிக லைக் வாங்கிய உலக தலைவர் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா என்றும், அவருடைய டுவிட்டரை அதிகமானோர் பின்பற்றுகின்றனர் என்றும் தெரிவித்து உள்ளது. இந்த பட்டியலில் நடிகை கிம்கர்தர்ஷியானும் இடம்பெற்றுள்ளார். சின மற்றும் பாலிவுட் நடிகர்கள், பாடகர்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி