அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் 1000 கி.மீ. தூரத்துக்கு அன்னா ஹசாரே பாத யாத்திரை!…

1000 கி.மீ. தூரத்துக்கு அன்னா ஹசாரே பாத யாத்திரை!…

1000 கி.மீ. தூரத்துக்கு அன்னா ஹசாரே பாத யாத்திரை!… post thumbnail image
புதுடெல்லி:-நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. நடப்பு பாராளுமன்ற கூட்டத் தொடரில் இந்த அவசர சட்டத்துக்கு ஒப்புதல் பெற மத்திய அரசு முயன்று வருகிறது. வருகிற 9ம் தேதி இந்த அவசர சட்டம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தில் உள்ள பல முக்கிய அம்சங்களுக்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

விவசாயிகளை இந்த சட்டம் பாதிக்கும் என்று கூறி சமூக சேவகர் அன்னா ஹசாரேயும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். டெல்லியில் மக்களைத் திரட்டி 2 நாட்கள் போராட்டம் நடத்திய அன்னா ஹசாரே அடுத்தக்கட்டமாக இந்த சட்டத்தை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளார். இதற்கான அறிவிப்பை அவர் விரைவில் வெளியிட உள்ளார்.

அன்னா ஹசாரேயின் திட்டப்படி அவர் பாத யாத்திரைக்கு அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வார்தாவில் இருந்து டெல்லி வரை 1000 கிலோ மீட்டர் தொலைவுக்கு அவர் பாத யாத்திரை செல்ல உள்ளார். பாத யாத்திரையை தொடர முடியாதபட்சத்தில் அவர் மோட்டார் சைக்கிள் யாத்திரை நடத்த கூடும் என்று கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி