பாலச்சந்தர் எனக்கு எழுதிய கடிதம் ஒன்றை இந்த மேடையில் ஒலி பரப்பினார்கள். அதை கேட்டதும் உணர்ச்சி வசப்பட்டுப் போனேன். எனக்கும் பாலச்சந்தருக்குமான பாசப்பிணைப்பு நெடுங்காலமாக தொடர்கிறது. எனது மகா குருவாக அவரை கருதுகிறேன். உத்தம வில்லன் படத்தில் பாலச்சந்தர் நடிக்க ஒப்புக் கொண்டது எனக்கு கிடைத்த பெரிய பெருமை. இந்த பாடல் வெளியீட்டு விழா மேடையில் அவர் இருப்பார் என்றுதான் அப்போது நான் கருதி இருந்தேன். அவர் இருக்க மாட்டார் என்று முன்பே தெரிந்து இருந்தால் இன்னும் பல சிறப்புகளை அவருக்கு செய்து இருப்பேன்.
பாலச்சந்தரில் நான் பாதியாக இருக்கிறேன் என்று இங்கே பேசிய பார்த்திபன் குறிப்பிட்டார். அப்படி அவர் பேசியதை கர்வமாக எடுத்துக் கொள்ளாமல் கடமையாகவும் உரிமையாகவும் ஏற்றுக் கொள்கிறேன். பாலச்சந்தர் என்ற மாமனிதரின் நிழலாக நான் இருப்பேன். அவர் பணிகளை தொடர்ந்து செய்வேன். காலமெல்லாம் அவருக்கு நன்றி உள்ளவனாகவும் இருப்பேன். இவ்வாறு கமலஹாசன் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி