லண்டன்:-செல்போனில் தன்னை தானே போட்டோ எடுக்கும் ‘செல்பி’ முறை சாதாரணமாகி விட்டது. ஆனால் 49 ஆண்டுகளுக்கு முன்பு விண்வெளியில் வீரர் ஒருவர் செல்பி மூலம் போட்டோ எடுத்துள்ளார். அவரது பெயர் புஷ் அல்டிரின். நாசா விண்வெளி விரர். இவர் கடந்த 1966ம் ஆண்டு நவம்பர் மாதம் ஜெமினி 12 விண்கலம் மூலம் விண்வெளிக்கு சென்றார்.
அங்கு அவர் செல்பி முறையில் போட்டோ எடுத்து இருந்தார். அந்த போட்டோ லண்டனில் உள்ள மையத்தில் ஏலம் விடப்பட்டது. சுமார் 10 மணி நேரம் நடந்த ஏலத்தில் அந்த செல்பி போட்டோ ரூ.60 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இது நிர்ணயிக்கப்பட்ட விலையை விட 10 மடங்கு கூடுதலாகும்.
அதே நேரத்தில் 1917 முதல் 1930–ம் ஆண்டு வரை விண்வெளியில் நாசாவால் எடுக்கப்பட்ட போட்டோக்களும் ஏலம் விடப்பட்டன. மொத்தம் அவை ரூ.5 கோடிக்கு ஏலம் போயின.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி