செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு 10 ஆண்டுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரானார் ஜக்மோகன் டால்மியா!…

10 ஆண்டுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரானார் ஜக்மோகன் டால்மியா!…

10 ஆண்டுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரானார் ஜக்மோகன் டால்மியா!… post thumbnail image
சென்னை:-இந்தியா கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) வருடாந்தர பொதுக்குழு கூட்டம் சென்னை அடையாறில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை நடைபெற்றது. புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான இந்தப் போட்டியில் ஓட்டு போடுவதற்கு தகுதியான அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு காரணமாக என்.சீனிவாசன் தலைவர் பதவிக்கு போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது. இந்த முறை தலைவரை நியமனம் செய்யும் வாய்ப்பை கிழக்கு மண்டலம் பெற்றது. என்.சீனிவாசனின் ஆதரவாளர்களான கொல்கத்தாவை சேர்ந்த ஜக்மோகன் டால்மியா கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். சரத்பவாருக்கு போதிய ஆதரவு இல்லாததால் தலைவர் பதவிக்கு அவர் போட்டியிடவில்லை.

போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு டால்மியா மீண்டும் தலைவரானார். ஏற்கனவே கடந்த 2001 முதல் 2004 வரை கிரிக்கெட் வாரிய தலைவராக பதவி வகித்துள்ளார் டால்மியா. பி.சி.சி.ஐ செயலாளர் பதவிக்கு அனுராக் தாக்கூரும், துணை தலைவராக சி.கே. கண்ணாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இணை செயலாளராக அமிதாப் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி