செய்திகள்,விளையாட்டு பாகிஸ்தான் இடக்கை பவுலர்களின் சாதனை – ஒரு பார்வை…

பாகிஸ்தான் இடக்கை பவுலர்களின் சாதனை – ஒரு பார்வை…

பாகிஸ்தான் இடக்கை பவுலர்களின் சாதனை – ஒரு பார்வை… post thumbnail image
* உலக கோப்பை போட்டியின் 23-வது ஆட்டத்தில் பாகிஸ்தானின் இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது இர்பான், வஹாப் ரியாஸ் 4 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர். ஒரே அணியில் இரு இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள் ஒரு ஆட்டத்தில் தலா 4 மற்றும் அதற்கு மேல் விக்கெட் கைப்பற்றுவது இதுவே முதல்முறையாகும்.

* உலக கோப்பையில் ஒரே ஆட்டத்தில் அரைசதம் அடித்து 4 விக்கெட்டுகளும் வீழ்த்திய முதல் பாகிஸ்தான் வீரர் வஹாப் ரியாஸ் தான்.

* ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் சதரா வீசிய 10 ஓவர்களில் 40 பந்துகளில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் ரன் ஏதும் எடுக்கவில்லை. இந்த உலக கோப்பையில் சதரா இதுவரை ரன் விட்டுக்கொடுக்காமல் 138 பந்துகள் (டாட் பந்து) வீசியிருக்கிறார். இந்த வகையில் நியூசிலாந்தின் டிரென்ட் பவுல்ட் (140 டாட் பந்து) முதலிடத்தில் உள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி