சென்னை:-தமிழ் சினிமாவில் ஒரு நடிகர் 1 படம் ஹிட் கொடுத்தாலே அவர்களை கையில் பிடிக்க முடியாது. ஆனால், தொடர்ந்து வெற்றிப்படங்களாக கொடுத்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் மிகவும் நிதானமாக அடுத்த அடியை எடுத்து வைக்கிறார்.
இவர் நடிப்பில் வெளிவந்து இருக்கும் காக்கிசட்டை படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தை பார்த்த பலரும் சிவகார்த்திகேயனை பாராட்டி வருகின்றனர்.
இதில் ரசிகர்கள் சிலர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு இவரை அடுத்த சூப்பர் ஸ்டார், இளைய தளபதி என்று கூற, இதை கேட்ட பலரும் அதற்குள் எதற்கு இவருக்கு பட்டம் என சிலர் திரையரங்குகளிலேயே கூறி சென்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி