இந்நிலையில், கிரிக்கெட் வாரிய நிர்வாகப் பொறுப்பில் என்.சீனிவாசன் நீடிப்பது தொடர்பாக சர்ச்சை நீடித்து வரும்போது, சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் என்.சீனிவாசன் கலந்து கொண்டது ஏன்? என சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் என்.சீனிவாசனின் நிலைப்பாடு என்ன? என்பது தொடர்பாக வரும் வெள்ளிக்கிழமை விசாரணையின்போது பதில் அளிக்குமாறு அவரது வக்கீல் கபில் சிபலுக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோர்ட் உத்தவை மீறி செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றதற்கு சீனிவாசன் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியிருப்பதாக அவர் சார்பில் ஆஜரான வக்கீல் கபில் சிபல் தெரிவித்தார்.
மேலும் மார்ச் 2-ந்தேதி நடைபெறும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியக் கூட்டம் உள்ளிட்ட எந்த ஒரு கூட்டத்திலும் சீனிவாசன் தலைமை தாங்கமாட்டார் என்றும் கபில்சிபல் உறுதியளித்தார்.
மேலும், மார்ச் 2-ம்தேதி நடைபெறும் கூட்டத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி என்ற முறையில் சீனிவாசன் ஒட்டு போட முடியும் என்ற விதிமுறையை கோர்ட் ஏற்றுக்கொண்டது. எனவே, ஆண்டு பொதுக்கூட்டத்தில் பிசிசிஐ தலைவராகவோ தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராகவோ சீனிவாசன் பங்கேற்க மாட்டார் என்பது தெளிவாகி உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி