லண்டன்:-இங்கிலாந்தின் முன்னாள் பாடகர் காரி கில்ட்டர் (70). இவரது உண்மையான பெயர் பால்காட். இவர் மிகப்பிரபலமான இசைக் கலைஞராக திகழ்ந்தார். உலகம் முழுவதும் புகழ் பெற்ற ‘ராக்ஸ்டார்’ (அதிரடி இசை பாடகர்) ஆக விளங்கினார். இந்நிலையில் அவர் மீது சமீபத்தில் செக்ஸ் புகார் கூறப்பட்டது.
13 வயதுக்கு குறைவான சிறுமிகளை கற்பழித்ததாக குற்றச் சாட்டுகள் எழுந்தது. அதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி அலிஸ்டார் மெக்கிரத் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும் அவருக்கு 16 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி