அடுத்து வந்த குர்ரம் கான் 14 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து 5-வது நபராக களம் இறங்கிய விக்கெட் கீப்பர் பட்டீல் 7 ரன்னில் நடையை கட்டினார். இதனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 14.5 ஓவரில் 41 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டை இழந்தது. அதன்பின் அன்வர் களம் இறங்கினார். இவர் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடினார். அவருக்கு யாரும் துணையாக நின்று விளையாடாததால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 71 ரன்கள் எடுப்பதற்குள் 9 விக்கெட்டை இழந்தது தத்தளித்தது.
கடைசி விக்கெட்டாக களம் இறங்கிய குருஜி ஓரளவு தாக்குப்பிடித்து 10 ரன்கள் எடுத்தார். இவரை துணையாக வைத்து விளையாடிய அன்வர் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அத்துடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இன்னிங்சும் முடிவுக்கு வந்தது. அந்த அணி 31.3 ஓவரில் 102 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சிறப்பாக பந்து வீசி 10 ஓவரில் 25 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். 102 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி