செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் எச்.எஸ்.பி.சி. வங்கிக்கு இந்திய வரித்துறை நோட்டீஸ்!…

எச்.எஸ்.பி.சி. வங்கிக்கு இந்திய வரித்துறை நோட்டீஸ்!…

எச்.எஸ்.பி.சி. வங்கிக்கு இந்திய வரித்துறை நோட்டீஸ்!… post thumbnail image
லண்டன்:-வரி ஏய்ப்பு, பணமோசடி மற்றும் சட்டவிரோதமான எல்லை கடந்த வங்கி சேவைகள் வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பல்வேறு நாடுகளின் விசாரணையை எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய வங்கியான எச்.எஸ்.பி.சி. வங்கிக்கு இந்திய வரித்துறை நோட்டீஸ்களை அனுப்பியுள்ளது.

இந்த தகவலை வெளியிட்டுள்ள எச்.எஸ்.பி.சி. வங்கி, தனது சுவிஸ் வங்கி கிளை மீதான முறைகேடு புகார் குறித்தும், பிற நாடுகளில் உள்ள வங்கிகளிடமும் வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும், விசாரணை முடிவில் குறிப்பிடத்தக்க அளவிலான அபராதத் தொகை விதிக்கப்படலாம் என்றும் அச்சம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க வரிச்சட்டத்தை மீறியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக சில வெளிநாடுவாழ் இந்தியர்கள் விசாரணையை எதிர்நோக்கி உள்ளனர். எனவே, அமெரிக்க அதிகாரிகளும் தனித்தனியாக எச்.எஸ்.பி.சி. வங்கிக்கு சம்மன்களை அனுப்பியுள்ளனர். எச்.எஸ்.பி.சி.யின் சுவிஸ் கிளையில் 1195 இந்தியர்கள் உள்ளிட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கணக்கு வைத்திருப்பது அம்பலமானது. இந்த கணக்குகளில் கள்ளப்பணம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சர்ச்சை எழுந்ததையடுத்து, அதிகாரிகள் விசாரணையை முடுக்கி விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி