செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு விமான நிலையத்தில் டோனியின் ஷூவை கழற்றி பரிசோதனை!…

விமான நிலையத்தில் டோனியின் ஷூவை கழற்றி பரிசோதனை!…

விமான நிலையத்தில் டோனியின் ஷூவை கழற்றி பரிசோதனை!… post thumbnail image
அடிலெய்டு:-உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, அடிலெய்டில் கடந்த 15ம் தேதி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை 76 ரன்கள் வித்தியாசத்தில் பந்தாடியது. அடுத்த ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை வருகிற ஞாயிற்றுக்கிழமை மெல்போர்ன் நகரில் எதிர்கொள்கிறது. மெல்போர்ன் நகருக்கு செல்வதற்காக இந்திய அணி வீரர்கள் அடிலெய்டு விமான நிலையத்திற்கு வந்தனர். எல்லா பயணிகளையும் போலவே இந்திய வீரர்களும் வரிசையாக நிறுத்தி சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.

கேப்டன் டோனி தனது உடமைகளை பரிசோதனை எந்திரத்திற்கு அனுப்பப்படும் ‘டிரே’யில் வைத்து விட்டு, ‘மெட்டல் டிடெக்டர்’ வழியாக அதை எடுக்க சென்றார். மெட்டல் டிடெக்டர் கருவியை டோனி கடந்த போது சத்தம் எழுப்பியது. இதையடுத்து ஆஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் அவரை அழைத்து பனியன், பேண்ட் பாக்கெட்டை சோதித்தனர். அதில் ஒன்றும் இல்லை. பின்னர் மீண்டும் மெட்டல் டிடெக்டர் வழியாக டோனி சென்ற போது அது மறுபடியும் ஒலி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. சந்தேகம் அடைந்த அதிகாரிகள் டோனியின் ஷூவை கழற்றி அதனையும் பரிசோதிக்கும் எந்திரத்திற்குள் வைத்து பார்த்தனர். ஷூவின் வடிவமைப்பில் இருந்த சிறிய அளவிலான உலோகத் தகடு காரணமாக மெட்டல் டிடெக்டர் ஒலி எழுப்புவது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவரை உள்ளே செல்ல அனுமதித்தனர்.

இதே போல் இந்திய அணியின் மேலாளர் ரவிசாஸ்திரி மெட்டல் டிடெக்டர் கருவியை கடந்து சென்ற போதும் ஒலி எழுப்பியது. இதனால் அவர் அணிந்திருந்த தொப்பி மற்றும் குளிர்ச்சிக்காக பயன்படுத்தப்படும் கண்ணாடியை கழற்றி பரிசோதித்தனர். இதில் கண்ணாடியில் உலோகத்திலான பிரேம் இருப்பது தெரியவந்தது. அதனால் அவரும் இது போன்ற பரிசோதனை அவஸ்தையை எதிர்கொள்ள நேர்ந்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி