சென்னை:-தென்னிந்திய சினிமாவில் நடிகர் விஜய்யின் நடனத்திற்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் இருக்கும். அந்த வகையில் இவர் நடித்து வரும் புலி படத்தில் ஒரு பாடல் காட்சியை படமாக்கியுள்ளனர்.
இப்பாடலில் ஜில்லா, வீரம் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்த வித்யுராமனும் இடம்பெறுகிறார். இது குறித்து தன் டுவிட்டர் பக்கத்தில் ருசிகர தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இதில், விஜய்யின் நடனத்தை கண்டு நான் அசந்து போய்விட்டேன், மேலும், நானும் அதில் சின்ன ஸ்டெப் ஒன்றை ஆடியுள்ளேன் என்று டுவிட் செய்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி