சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஏனெனில் நடிகர் அஜித்தின் மாஸ் படத்தில் குறைவாக உள்ளது என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், இப்படம் தான் அஜித்தின் திரைப்பயணத்தில் வெளி நாடுகளில் அதிகம் வசூல் செய்த படமாம். இதுவரை இப்படம் ஓவர்சிஸில் ரூ 25 கோடிகளுக்கு மேல் வசூல் வந்துள்ளது.
மேலும், வெளி நாடுகளில் அதிகம் வசூல் செய்த தமிழ் படங்களில் டாப் 10 பட்டியலில் என்னை அறிந்தால் இடம்பெற்றுள்ளது. இதற்கு முன் எந்திரன், சிவாஜி, தசாவதாரம், ஐ, கத்தி, லிங்கா, ஆரம்பம், சிங்கம்-2 ஆகிய படங்கள் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி