செய்திகள்,திரையுலகம் ‘சூப்பர் ஸ்டார்’ பட்டத்தை ஏற்று கொண்ட நடிகர் தனுஷ்!…

‘சூப்பர் ஸ்டார்’ பட்டத்தை ஏற்று கொண்ட நடிகர் தனுஷ்!…

‘சூப்பர் ஸ்டார்’ பட்டத்தை ஏற்று கொண்ட நடிகர் தனுஷ்!… post thumbnail image
சென்னை:-தென்னிந்திய சினிமா தாண்டி பாலிவுட் வரை கலக்கி கொண்டிருக்கிறார் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த அனேகன் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில் சில வருடங்களாகவே தனுஷை சந்தித்து சிலர் உங்கள் பெயருக்கு முன்னால் ஏதாவது பட்டம் போடுங்கள் என்று கூறி வருகின்றனர்.

ஆனால், இதெல்லாம் நமக்கு வேண்டாம் என்று அவர் கூறி வந்த நிலையில், நேற்று ரசிகர் ஒருவர் ‘இளைய சூப்பர் ஸ்டார்’ என்று தனுஷிற்கு டுவிட் செய்திருந்தார். இதை அவர் ரீடுவிட் செய்ய, எல்லோரும் தனுஷ் சூப்பர் ஸ்டார் பட்டத்தை ஏற்று கொண்டார் என கமெண்ட் அடிக்க ஆரம்பித்து விட்டனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி