பனாஜி :- மத்தியில் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றபோது மனோகர் பாரிக்கர் பாதுகாப்புத்துறை மந்திரியாக பதவியேற்றார். இதற்காக அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் காலியாக இருந்த கோவா மாநிலம் பனாஜி தொகுதிக்கு கடந்த 13-ம்தேதி இடைத்தேர்தல் நடந்தது. 71 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
இன்று வாக்குகள் எண்ணப்பட்டபோது, ஆளும் பா.ஜனதா கட்சியின் வேட்பாளர் சித்தார்த் குன்கோலியங்கார் 5368 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் மொத்தம் 9989 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பர்டாடோ 4621 வாக்குகளும், சுயேட்சை வேட்பாளர் சமீர் கெலேகர் 624 வாக்குகளும் பெற்றனர்.
தற்போதைய மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி மனோகர் பாரிக்கர் 1994ம் ஆண்டு பனாஜி தொகுதியில் வெற்றி பெற்றார். அப்போது முதல் தொடர்ந்து 6-வது முறையாக பா.ஜனதா இந்த தொகுதியை தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி