செய்திகள்,விளையாட்டு தோற்ற அதிர்ச்சியில் பாகிஸ்தான் ரசிகர்கள் வன்முறை…

தோற்ற அதிர்ச்சியில் பாகிஸ்தான் ரசிகர்கள் வன்முறை…

தோற்ற அதிர்ச்சியில் பாகிஸ்தான் ரசிகர்கள் வன்முறை… post thumbnail image
உலக கோப்பை போட்டியில் இந்தியா–பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதிய ஆட்டம் அப்படியே அமைந்தது. ‘பந்த்’ போன்று நேற்று இந்தியா முழுவதும் வெறிச்சோடியே காணப்பட்டது. வீடுகளிலும், ரெஸ்டாரண்டுகளிலும், விஷேசமாக அமைக்கப்பட்ட அரங்குகளில் அமர்ந்து கிரிக்கெட் போட்டியை ரசித்தனர்.

ரசிகர்களின் ஆவலை இந்திய வீரர்கள் பூர்த்தி செய்தனர். இந்த முறையும் உலக கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்திய சாதனையை இந்திய அணி தொடர்ந்து தக்க வைத்தது. 76 ரன்னில் வீழ்த்தியதால் இந்தியா முழுவதும் ரசிகர்கள் வெற்றியை கொண்டாடினார்கள்.

பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு வழங்கியும் வெற்றி கொண்டாட்டத்தை பகிர்ந்து கொண்டனர். மேலும் ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சி உணர்வை வெளிப்படுத்தினர். உலக கோப்பையை கைப்பற்றியது போல இந்திய ரசிகர்கள் இந்த வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் நரேந்திர மோடியும், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் இந்திய அணியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.

அதே நேரத்தில் பாகிஸ்தானில் சோகம் தாண்டவமாடியது. ஏற்கனவே உலக கோப்பையில் 5 முறை இந்தியாவிடம் தோற்று இருந்ததால் இந்த தடவையாவது வெற்றி தரும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கி இருந்தனர்.

இந்த தடவையும் தோற்றதால் அவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். கராச்சியில் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். தெருக்களில் டி.வி.க்களை கிரிக்கெட் மட்டையால் உடைத்தனர்.

பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிராகவும் கோஷமிட்டனர். வன்முறையில் ஈடுபட்ட ரசிகர் ஒருவர் கூறும்போது, இந்த முறை பாகிஸ்தான் வெற்றி பெறும் என்று மிகுந்த நம்பிக்கையோடு இருந்தேன். பாகிஸ்தான் மோதும் எந்த ஒரு ஆட்டத்தையும் இனி பார்க்க மாட்டேன் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி